வை.சிவநேசன்

வை.சிவநேசன்

வளர்மதி முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால அங்கத்தவர். 1995ஆம் ஆண்டில் கழகத்தலைவராகப் பணியாற்றியவர். 1989 / 1990களில் ‘உள்ளம்’ வெளியானபோது, விளையாட்டுத்துறை சம்பந்தமாக பல சுவாரசியமான கட்டுரைகளை வரைந்த சிவநேசன், ‘உள்ளம்’ ஆசிரியர் குழுவிலும் ஓர் அங்கத்தவராகப் பணியாற்றி இருந்தார்.

தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார். தொழில் நிர்வாகம், நிதி துறைகளில் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றவர். இங்கிலாந்தின் முகாமை கணக்கியல் நிறுவனம், மற்றும் ஐக்கிய அமெரிக்க கணக்கியல் பட்டயங்களைக் கொண்டவர். வங்கியியல், நிதி மற்றும் வங்கி மேற்பார்வை துறைகளில் இவரது கட்டுரைகள் இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன.

இலங்கை மத்திய வங்கியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களிலும் இலங்கை வங்கியாளர் நிறுவனம், மத்திய வங்கியின் வங்கி கற்கைகள் நிலையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

  • Male
  • 0

No products were found matching your selection.