அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்

(வி. ஆர். பரந்தாமன்) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அலெக்ஸ்பரந்தாமன், 80களின் இறுதியில் ‘உள்ளம்’ கலை இலக்கிய மாத சஞ்சிகையில் ‘ஒருபிடி அரிசி’ எனும் சிறுகதையை எழுதியதனூடாக எழுத்துஇலக்கியப் பரப்பிற்கு அறிமுகமானார்.

90களின் ஆரம்பத்தில் ‘ஈழநாதம்’ எனும் பத்திரிகை ஊடகத்துள் ‘ஒப்புநோக்கும் பயிலுநர்’ ஆக உள்நுழைந்து, காலநகர்வில் உதவி ஆசிரியராக, பத்தி எழுத்தாளராக, பிரதேச செய்தியாளராக, இலக்கியப் படைப்பாளியாக வேறும் சில பத்திரிகை ஊடகங்களில் பணியாற்றியதன் ஊடாக எழுத்துப்பரப்பில் வளர்ச்சி கண்டார்.

அழுகைகள் நிரந்தரமில்லை, தோற்றுப் போனவளின் வாக்குமூலம், ஒருபிடி அரிசி போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், மரணவலிகள் என்ற கவிதைத் தொகுப்பினையும் இதுவரை தந்துள்ளதோடு, அவலம் சுமந்த அகதிகள் என்ற வன்னிப்போர்க்கள மக்களின் அவலத்தை வைத்து ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.

  • Male
  • 0

No products were found matching your selection.